இலங்கை

அம்பிட்டிய சுமன ரத்ண தேரருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை – சுமந்திரன் கேள்வி!

அம்பிட்டிய சுமன ரத்ண  தேரருக்கு எதிராக பொலிஸார் ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என கோரி பொலிஸ்மா அதிபருக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எங்கள் கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கத்தை தாக்கி தேரர் தொடர்ச்சியாக அறிக்கைவிடுத்துள்ளார்.

மேலும் அவர் நாட்டின் தென்பகுதியில் வசிக்கும் தமிழ்மக்களை வெளிப்படையாக அச்சுறுத்தும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார், அவர்களை துண்டுதுண்டாக வெட்டப்போவதாக தெரிவித்துள்ளார்.

இது ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய அப்பட்டமான குற்றமாகும்.

பொலிஸார் ஏன் தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!