வெலகம ஏன் உயிரிழந்தார் – முன்னாள் எம்பி வெளியிட்ட தகவல்
2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடலை மையமாகக் கொண்ட வன்முறைச் சூழலின் போது இடம்பெற்ற தாக்குதலின் பக்கவிளைவுகளே முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவின் மரணத்திற்குக் காரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியால் நிஷாந்த தெரிவித்துள்ளார். .
செயற்பாட்டாளர்களால் கடுமையாக தாக்கப்பட்டதில் வெல்கமவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும், இதனால் வெல்கம அவ்வப்போது வைத்தியசாலையில் அனுமதிக்க நேரிட்டதாகவும் அவர் கூறினார்.
மறைந்த குமார வெல்கமவின் இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





