ஸ்பெயின் – முக்கிய வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை!
ஸ்பெயினின் முக்கிய வங்கிளில் ஒன்றான Santander வங்கியின் சமீபத்திய தரவுகள் அனுமதியின்றி அணுகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்த வங்கியின் வாடிக்கையாளர்களில் சிலரையும் அதன் தற்போதைய ஊழியர்கள் அனைவரையும் பாதித்துள்ளது.
குறித்த வங்கியானது மூன்றாம் தரப்பு வழங்குநரால் வழங்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத அணுகலை நாங்கள் சமீபத்தில் அறிந்தோம் என்று கடந்த செவ்வாய்கிழமை அறிவித்தது.
சிலி, ஸ்பெயின் மற்றும் உருகுவே வாடிக்கையாளர்கள் மற்றும் குழுவின் தற்போதைய மற்றும் சில முன்னாள் பணியாளர்கள் தொடர்பான சில தகவல்கள் அணுகப்பட்டதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த வங்கியின் பிற சந்தைகள் தங்களின் தரவு தளம் பாதுகாப்பாக உள்ளதாக அறிவித்துள்ளன.
ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய கடன் வழங்குநரான வங்கி, அதன் சமீபத்திய காலாண்டு அறிக்கையின்படி, உலகளவில் சுமார் 210,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது. இது ஸ்பெயினில் 15 மில்லியன் வாடிக்கையாளர்களையும் சிலியில் கிட்டத்தட்ட நான்கு மில்லியன் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது.