ரஷ்யாவின் முக்கிய நகரை விட்டு வெளியேறிய வாக்னர் படையினர்!
வாக்னர் படையினர் ரஷ்யாவின் கான்வாய் நகரத்தை விட்டு வெளியேறியுள்ளதாக ரோஸ்டாவ் ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார்.
“வாக்னர் பிஎம்சி கான்வாய் ரோஸ்டோவை விட்டு வெளியேறி அதன் கள முகாம்களுக்குச் சென்றது என அப்பிராந்தியத்தின் ஆளுநர் வாசிலி கோலுபேவ் டெலிகிராமில் இட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்னர் கூலி படையினர் நேற்று அதிகாலை ரஷ்யாவின் முக்கிய நகரை கைப்பற்றின. ரஷ்யா மீது போர் தொடுப்பதாகவும், ரஷ்யாவிற்கு புதிய தலைவர் தேவை எனவும் குறிப்பிட்டனர்.
இதற்கிடையில் ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் ஜனாதிபதி லுகாஷென்கோவின் தரகு மூலம் விளாடிமிர் புட்டினுடன் ஒரு உடன்படிக்கைக்கு வந்த பின்னர் வாக்னர் படையின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் படையினரை வெளியேறுமாறு உத்தரவிட்டார்.
(Visited 10 times, 1 visits today)