சுவிட்சர்லாந்தில் தேவாலயத்தில் நடத்த அத்துமீறல்கள் : உண்மைகளை பகிரங்கப்படுத்திய அறிக்கை!
சுவிட்சர்லாந்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் 1000 துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கடந்த ஒரு வருட காலமாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி கடந்த 20 ஆம் நூற்றாண்டில் இருந்து ஏறக்குறைய 1000 துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவ்வாறான நடவடிக்கைகளில் பாதிரியார்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சூரிச் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர்களால் மேற்கொள்ளப்பட் ஆய்வின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், சமீபத்திய தசாப்தங்களில் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபையை குழப்பிய பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் பற்றிய அரிய மற்றும் ஆழமான பார்வையை வழங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.
இவ்வாறான துஷ்பிரயோக சம்பவங்களால் 912 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.