கத்ரீனா கைஃப் – விக்கி கௌஷல் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது
பாலிவுட் தம்பதிகளான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்ரீனா கைஃப் – விக்கி கெளஷல் ஆகியோர், ராஜஸ்தானில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவந்த கத்ரீனா கைஃப், கடைசியாக விஜய் சேதுபதியுடன் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் நல்ல செய்தியை அறிவித்த கத்ரீனா கைஃப் – விக்கி கௌஷல் ஜோடிக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.

(Visited 2 times, 2 visits today)




