ட்ரம்பின் வரிவிதிப்புகளுக்கு மத்தியில் சீன அதிகாரிகளை சந்திக்கும் அமெரிக்க கருவூல செயலாளர்!

ஜனாதிபதி ட்ரம்பின் வரி விபதிப்பு காரணமாக சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், அமெரிக்க கருவூல செயலாளரும் அமெரிக்காவின் உயர்மட்ட வர்த்தக பேச்சுவார்த்தையாளரும் இந்த வார இறுதியில் சுவிட்சர்லாந்தில் உயர்மட்ட சீன அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளனர்.
கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோர் துணைப் பிரதமர் ஹீ லைஃபெங் தலைமையிலான சீனக் குழுவை ஜெனீவாவில் சந்திப்பார்கள்.
இதன்போது இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தங்கள் பொருட்களின் மீது விதித்துள்ள பாரிய வரிகளை – கட்டணங்களை – குறைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரியவருகிறது.
இது உலக நிதிச் சந்தைகள் மற்றும் அமெரிக்க-சீன வர்த்தகத்தை நம்பியுள்ள பசிபிக் பெருங்கடலின் இருபுறமும் உள்ள நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் சீனா மீதான அமெரிக்க வரிகளை 145% ஆக உயர்த்தினார், மேலும் சீனா அமெரிக்க இறக்குமதிகளை 125% வரி விதிப்பதன் மூலம் பதிலடி கொடுத்தது. அதிக வரிகள் என்பது, இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று பொருட்களைப் புறக்கணிப்பதற்கு சமமாகும்.