லண்டனில் வழக்கத்திற்கு மாறான வானிலை – மகிழ்ச்சியில் ஐஸ் கிரீம் வியாபாரிகள்
லண்டனில் வழக்கத்திற்கு மாறாக வெப்பமான வானிலை நிழவுவதால் ஐஸ் கிரீம் வியாபாரிகளின் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மக்கள் அதிகம் நாடும் பாரம்பரிய soft-serve வகை ஐஸ் கிரீம் விற்பனை பாரிய அளவில் அதிகரித்துள்ளது.
லண்டனில் கோடைக்காலம் இன்னும் வரவில்லை. அதற்குள் வெப்பம் தாங்கமுடியாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சூடான வானிலையால் மக்கள் பெரும்பாலும் வெளியில்தான் பொழுதைப் போக்குகின்றனர்.
ஐஸ் கிரீம் விற்பனையும் சுறுசுறுப்பாக நடக்கிறது. குறிப்பாக மக்கள் “whippy” வகை ஐஸ் கிரீம்களை அதிகம் கேட்டு வாங்குவதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐஸ் கிரீம் வண்டியின் சத்தம் கேட்டாலே மக்கள் வேகவேகமாய்ப் போய் வரிசைபிடிக்கின்றனர். பிடித்த ஐஸ் கிரீமைப் பிடித்தபடி வாங்கிக்கொள்ளவும் முடிகிறது.
(Visited 17 times, 1 visits today)





