குர்ஸ்கில் உள்ள அணுமின் நிலைய தீ விபத்திற்கு உக்ரைனின் ட்ரோன் தாக்குதலே காரணம்!

ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்களே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பல ரஷ்ய மின் மற்றும் எரிசக்தி வசதிகள் ஒரே இரவில் குறிவைக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை, தீ விரைவாக அணைக்கப்பட்டதாக ஆலையின் பத்திரிகை சேவை டெலிகிராமில் செய்தி செயலியில் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் ஒரு மின்மாற்றி சேதமடைந்ததாகவும், ஆனால் கதிர்வீச்சு அளவுகள் சாதாரண வரம்பிற்குள் இருந்ததாகவும் அது கூறியது.
ரஷ்யாவின் லெனின்கிராட் பிராந்தியத்தில் உள்ள உஸ்ட்-லுகா துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
அங்கு ஒரு பெரிய எரிபொருள் ஏற்றுமதி முனையம் உள்ளது. சுமார் 10 உக்ரேனிய ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதாகவும், குப்பைகள் தீயை தூண்டியதாகவும் பிராந்திய ஆளுநர் கூறினார்.
ரஷ்ய குற்றச்சாட்டுகள் குறித்து உக்ரைன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.