முழு இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட உகாண்டா ஒலிம்பிக் வீராங்கனை

உகாண்டா ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீராங்கனையான ரெபெக்கா செப்டேஜி,உகாண்டாவின் வடகிழக்கில் உள்ள அவரது மூதாதையர் வீட்டில் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் மராத்தானில் பங்கேற்ற 33 வயதான அவர், கடந்த வாரம் கென்யா டிக்சன் என்டிமா மரங்காச்சால் தாக்கப்பட்ட பின்னர் கடுமையான தீக்காயங்களால் இறந்தார்.
உகாண்டா மற்றும் கென்யாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள், உறவினர்கள், அதிகாரிகள் மற்றும் சக ஒலிம்பியன்கள் கென்யாவுடனான உகாண்டாவின் எல்லைக்கு அருகிலுள்ள புக்வோ கிராமத்தில் செப்டேஜிக்கு மரியாதை செலுத்தினர்.
உகாண்டா இராணுவத்தின் துப்பாக்கி மரியாதை உட்பட முழு இராணுவ மரியாதையுடன் அவரது உடல் அவரது கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
கென்யாவின் விளையாட்டு மந்திரி கிப்சும்பா முர்கோமென் , “தன்னலமற்ற தன்மை, தாராள மனப்பான்மை மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் போற்றத்தக்க உணர்வை வெளிப்படுத்தினார். அவரது மரணம், “மலரும் வாழ்க்கைக்கு ஒரு சோகமான முடிவு” என்று தெரிவித்தார்.