அமெரிக்காவில் விமானங்கள் மோதியதில் இருவர் பலி

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் 2 சிறிய விமானங்கள் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மரானா வட்டார விமான நிலையத்துக்கு அருகே நடுவானில் விமானங்கள் மோதிக்கொண்டன.
விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அரிசோனா நேரப்படி காலை 8.30 மணியளவில் 2 விமானங்களும் மோதிக்கொண்டன. அவை ஒவ்வொன்றிலும் இருவர் இருந்தனர்.
ஒரு விமானம் சீரற்ற வகையில் தரையிறங்கியது. மற்றொரு விமானம் நிலத்தில் விழுந்தது.
மரானா வட்டார விமான நிலையத்தில் ஆகாயப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையம் ஏதும் இல்லை.
(Visited 3 times, 1 visits today)