இலங்கையில் வெளிநாட்டு பெண்கள் இருவர் அதிரடியாக கைது
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்ட இரண்டு வெளிநாட்டு பெண்கள் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கண்டி மத்திய சந்தை வளாகத்தில் வர்த்தகம் செய்து கொண்டிருந்த சீன பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)





