பார்சிலோனாவில் இரு பேருந்துகள் மோதி கோர விபத்து : 51 பேர் படுகாயம்‘!
பார்சிலோனாவின் மையத்தில் இரண்டு பேருந்துகள் மோதியதில் டஜன் கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
சாக்ரடா ஃபேமிலியாவுக்கு அருகிலுள்ள அவிங்குயிடா டயகோனலில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 இல் இருந்து 51 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பிரித்தானியர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்து நடந்த பகுதியில் சுமார் 20 ஆம்புலன்ஸ்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விபத்து நடந்த அவென்யூ சம்பவத்தின் விளைவாக போக்குவரத்துக்கு மூடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 33 times, 1 visits today)





