பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ரயில் : பணய கைதிகளை மீட்க போராடும் படையினர்!

பாகிஸ்தானில் 300 பணய கைய்திகளுடன் ரயில் ஒன்று கடத்தப்பட்ட நிலையில் அவர்களை மீட்க அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
பணயக்கைதிகள் வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட ஆடைகளை அணிந்திருந்த தீவிரவாதிகளால் சுற்றி வளைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் 27 பேர் கொள்ளப்பட்டுள்ளதாகவும் 150 பணய கைதிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் இத்தகைய தாக்குதலை நடத்தியது இதுவே முதல் முறை.
பலூச் லிபரேஷன் ஆர்மி குழு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது, அத்துடன் கைதிகளை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.
இதுவரை, கிளர்ச்சியாளர்களின் சலுகைக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த பதிலும் இல்லை அல்லது எந்த அறிகுறியும் இல்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.