‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனருக்கு டும்.. டும்.. டும்
 
																																		சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். முதல் படத்திலேயே பலரின் கவனத்தையும் ஈர்த்ததுடன் பாராட்டையும் பெற்றார் அபிஷன்.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போதே, மேடையில் தனது நீண்ட நாள் காதலியான அகிலாவிடம் திருமணம் செய்ய சம்மதமா? என கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் அபிஷன் ஜீவிந்த் திருமணம் இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

(Visited 4 times, 4 visits today)
                                     
        



 
                         
                            
