சஜித் பிரேமதாசவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவு! வெளியான அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது.
இதன்போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர். எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
பிரேமதாச கடந்த வார இறுதியில் யாழ்ப்பாணம் சென்று மதத் தலைவர்களை சந்தித்து நல்லூர் கோவிலுக்கு விஜயம் செய்து ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு ஆசிர்வாதம் பெற்று வந்த பின்னர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெற்றிகரமாக வெளியிட்டார்.
(Visited 10 times, 1 visits today)