விண்வெளியில் உள்ள பொருட்களை அடையாளம் காணும் திட்டத்தை அறிவித்த மூன்று முக்கிய நாடுகள்!
UK, US மற்றும் Australia ஆகியவை அதிக ஆற்றல் கொண்ட ரேடார்களைப் பயன்படுத்தி ஆழமான விண்வெளியில் உள்ள பொருட்களைக் கண்காணித்து அடையாளம் காணும் திட்டத்தை அறிவித்துள்ளன.
இந்த திட்டத்தின்படி, AUKUS பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், செயற்கைக்கோள்களைப் பாதுகாப்பதற்கும் விண்வெளிப் போக்குவரத்திற்கு உதவுவதற்கும் UK, US மற்றும் ஆஸ்திரேலியாவில் மூன்று ரேடார்களின் நெட்வொர்க் அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
2030 ஆம் ஆண்டுக்குள் ரேடார்கள் முழுமையாக செயல்பட்டால், இந்த அமைப்பு பூமியில் இருந்து 22,000 மைல் தொலைவில் உள்ள பொருட்களை வகைப்படுத்த முடியும் என்று இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மூன்று நாடுகளின் “தனித்துவமான புவியியல் நிலைப்பாடு” என்பது ஆழமான விண்வெளி மேம்பட்ட ரேடார் திறன் (DARC) திட்டம் உலகளாவிய கவரேஜை வழங்கும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் ரேடார், பெம்ப்ரோக்ஷயரில் உள்ள காவ்டர் பாராக்ஸில் கட்டுமானத்திற்காக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.