கனடாவில் அச்சுறுத்தலுக்கு இடமில்லை – அரசாங்கம் அதிரடி அறிவிப்பு
கனடாவில் வெறுப்பு, அத்துமீறல், அச்சுறுத்தல் போன்றவற்றுக்கு இடமில்லை என அறிவிக்க்பபட்டுள்ளது.
கனேடிய பாதுகாப்புத் துறை இவ்வாறு தெரிவித்துள்ளது.
இந்து சமயத்தைப் பின்பற்றும் கனடியக் குடிமக்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு சொல்லும் காணொளி பரவலாகிவருவதைத் தொடர்ந்து, ஒட்டாவா அதனைத் தெரிவித்தது.
வெறுப்பைத் தூண்டும் அந்தக் காணொளி மற்றவர்களைப் புண்படுத்தக் கூடியது என்று பாதுகாப்புத் துறை X-சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
கனடியர்களுக்கும் அவர்கள் பெரிதும் மதிக்கும் பண்புகளுக்கும் அது எதிரானது என்றும் அறிக்கை தெரிவித்தது.
மற்றவர்களிடம் அச்சத்தைத் தூண்டுவிடும் செயல், கனடாவைப் பிளவுபடுத்தவே செய்யுமென்றது அறிக்கை.
கனடியர்கள் ஒருவரை ஒருவர் மதித்து சட்டத்தைப் பின்பற்றுமாறு அறிக்கை கேட்டுக்கொண்டது.
சமூக ஊடகத்தில் பரவிவரும் சர்ச்சைக்குரிய காணொளி கனடாவிலுள்ள இந்துக்களை இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டது.