ஈழத்தமிழர்களுக்காக அமெரிக்க பிரதியிதிகள் சபையில் ஒலித்த குரல்

ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்யண உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் don davis கூறியுள்ளார்.
பிரதிநிதிகள் சபையில் நேற்று உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 2009 ஆம் ஆண்டில் தமிழர் இனப்படுகொலை புரியப்பட்டதாகக் கூறினார். அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெற்றதை அவர் சுட்டிக் காட்டினார்.
தமிழர்களுக்கு வழங்கப்படும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வு இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமைதியையும், உறுதிப்பாட்டையும் உறுதி செய்யுமென அவர் தெரிவித்தார்.
(Visited 13 times, 1 visits today)