தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வவுனியா நகர தீயணைப்பு சேவை
வவுனியா நகரசபை தீயணைப்பு சேவைக்கு பயன்படுத்தப்படும் வாகனம் பழுதடைந்துள்ளதனால் அதனைத் திருத்தும் நடவடிக்கைக்கு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அச்சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நகரசபை செயலாளரால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. மீளவும் குறித்த வாகனம் திருத்த வேலைகள் நிறைவடைந்ததும் அதன் பணிகள் மிக விரைவில் தொடர்ந்து இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)





