இலங்கை

இலங்கை அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நிலை – நோயாளிகளுக்கு நெருக்கடி

இலங்கையில் சீடீ உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான இயந்திரங்கள் அரச வைத்தியசாலை கட்டமைப்பில் தொடர்ந்தும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

சில CT Scan இயந்திரங்கள் பல மாதங்களாக செயலிழந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம கூறினார்.

இந்த இயந்திரங்கள் செயலிழந்துள்ளமையினால் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாமல் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக ஸ்ரீ சந்ரகுப்தவிடம் வினவிய போது, குறித்த இயந்திரங்களை பழுதுபார்ப்பதற்காக நிதி அமைச்சிடம் இருந்து தற்போது நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறினார்.

அதற்கமைய, அவற்றை விரைவாக பழுதுபார்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content