ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமைக்கான காரணம் வெளியாகியது!
கடந்த சில நாட்களாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை தற்காலிகமான நிலையே என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் அதன் மதிப்பை நிர்ணயிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார்.
வழங்கல் மற்றும் தேவையின் அடிப்படையில் டொலர் மற்றும் ரூபாவின் பெறுமதி தீர்மானிக்கப்படுவதற்கு நாங்கள் அனுமதித்துள்ளோம் எனவும், இலங்கையின் அபிவிருத்திப் பத்திரங்களில் சுமார் 750 மில்லியன் டொலர்கள் இருந்ததைக் காண்கின்றோம் எனவும் கூறினார்.
இது உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பின் போது ஏற்றுக்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்த அவர், அபிவிருத்திப் பத்திரங்கள் இலங்கை ரூபாயில் செலுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இதை அவர்கள் டொலர் வைப்புத்தொகை மூலம் வாங்கினார்கள். பின்னர் வைப்பாளர்களுக்குத் தேவைப்படும் போது அவர்களைக் காப்பாற்றுவதற்காக வங்கிகள் இந்த டொலர்களை சேகரிக்க வேண்டிய தேவை உள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.