சீனாவின் வாழும் முதியவர்களின் பரிதாப நிலை
சீனாவின் மக்கள்தொகைப் பரிணாம வளர்ச்சியுடன், ஓய்வூதிய முறை புதுப்பிக்கப்படாததால், அந்நாட்டு முதியோர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு 280.04 மில்லியனாக இருந்த 60 வயதுக்கு மேற்பட்ட சீனாவின் மக்கள் தொகை 2023 ஆம் ஆண்டில் 296.97 மில்லியனாக வளர்ந்துள்ளனர்.
அதன்படி, சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 21.1% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகும்.
வயதான சனத்தொகை அதிகரிப்புடன், ஓய்வூதியத் திட்டத்தில் உரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாததால், எதிர்காலத்தில் அதே சம்பள முறையைப் பேணுவது கூட நெருக்கடியாக இருக்கும் என வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் ஓய்வு பெற்றவர்களுக்கு தேவையான விரிவான பாதுகாப்பு மற்றும் பலன்களில் ஏற்கனவே ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
சீன அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் முதியோர்களின் தேவைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு இல்லாமை சீனாவின் ஓய்வூதிய அமைப்பில் ஒரு முக்கிய பலவீனமாகத் தோன்றுவதாகவும் அந்நாட்டின் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டின் அரசாங்கம் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள்தொகை ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும், முதியோர்களின் நலனை புறக்கணித்துள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.