இந்திய ரூபாய்களை வைத்திருந்த பாகிஸ்தான் பிரஜைக்கு கிடைத்த தண்டனை!
3 இலட்சத்து 61 500 இந்திய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (02.08) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பாகிஸ்தான் பிரஜையான மொஹமட் தாஹிர் என்ற பிரதிவாதி நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதன்படி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 02 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்த உயர் நீதிமன்ற நீதிபதி அதனை 7 வருடங்களுக்கு இடைநிறுத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், பிரதிவாதிக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. ஜூலை 15, 2013 அன்று, 361 இந்திய ரூபாய் 500 தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார், பின்னர் அவருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்தார்.