இலங்கை

இலங்கையில் இம்மாதத்தில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 2000 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைக்காலமாக பெய்து வரும் மழையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல்களின்படி, செப்டம்பர் மாதத்தில் 2003 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

முன்னைய மாதங்களை விட அந்த மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என சுகாதார திணைக்களம் கணித்திருந்தது. இருப்பினும்  இந்த  மாதத்தின் மூன்றாவது வாரத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,881 ஆக அதிகரித்துள்ளது.

டெங்கு அபாய வலயங்கள் 07 ஆக குறைக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய மழையினால் அது மேலும் அதிகரிக்கலாம் என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்