ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த வடகொரிய ஜனாதிபதி
வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் தனிப்பட்ட ரயில் ரஷ்ய எல்லைக்குள் நுழைந்ததை ஜப்பான் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, எல்லைக்கு அருகில் வடகொரிய தலைவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக ரஷ்யா வந்தடைந்தார்.
குறித்த பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் பங்கேற்பதற்காக வடகொரிய தலைவர் நேற்று காலை ரயிலில் பயணம் செய்ய ஆரம்பித்ததாகவும், ரஷ்ய எல்லைக்குள் நுழைவதற்கு 20 மணி நேரம் பிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யா மற்றும் வடகொரியா தலைவர்களுக்கு இடையிலான இந்த சந்திப்பு குறித்து அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.