பைக்குள் சடலம் மீட்கப்பட்ட விவகாரம் ; அறுவர் கைது!

சீதுவ, தண்டுகம் ஓயாவில் பயணப் பைக்குள் ஆண் ஒருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், கட்டான பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டவர்களாவர் என சீதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செப்டெம்பர் 15ஆம் திகதி, சீதுவ தண்டுகம் ஓயாவின் கரையில் கைவிடப்பட்ட பயணப் பைக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(Visited 16 times, 1 visits today)