அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எடுத்த முக்கிய தீர்மானம்!

திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட மத்தியக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இதனை தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் நேற்று இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட மத்தியக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் புத்தளம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தனித்து போட்டியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
(Visited 65 times, 1 visits today)