சிங்கப்பூருக்கு செல்ல முயன்ற தமிழருக்கு நேர்ந்த கதி
சிங்கப்பூருக்கு போலி கடவுசீட்டு மூலம் செல்ல முயன்ற தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா, ஏர் ஏசியா, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்கூட் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விமான சேவையை வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் கடவுசீட்டு உள்ளிட்ட ஆவணங்களை குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம்.
அந்த வகையில், ஜூலை 12- ஆம் திகதி அன்று திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் (Indigo Airlines) புறப்பட தயாராக இருந்த நிலையில், அந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் ஆவணங்களைக் குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, மதுரை மாவட்டம், வெள்ளையனூரைச் சேர்ந்த கண்ணன் (வயது 55) என்பவர் குமார் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் பெற்று சிங்கப்பூருக்கு வர முயன்றதைக் கண்டறிந்த அதிகாரிகள், அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர், திருச்சி விமான நிலையக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் சக பயணிகளிடையே கடும் அதிர்ச்சியையும், விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பையையும் ஏற்படுத்தியது.