ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!
உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இந்த வாரத்தின் பிற்பகுதியில், எழுத்துப்பூர்வ நடைமுறையின் மூலம் தடைகள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் போது, எவ்வாறான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விவரங்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப். 24, 2022 அன்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது படைகளை உக்ரைனுக்குள் அனுப்ப உத்தரவிட்டதிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது 10 சுற்று தடைகளை விதித்துள்ளது.
இதனால் ரஷ்யா மிகப் பெரிய இழப்பை சந்தித்துள்ளதுடன், 1000 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் சொத்து முடக்கத்தை எதிர்கொள்கிறார்கள்.
(Visited 5 times, 1 visits today)