செய்தி

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம்!

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளார்கள்.

இதன்போது, சகல அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பாதுகாப்பு மற்றும் நிதி ஆகிய அமைச்சுகளின் பொறுப்புகளைத் தாம் வகிப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி அமரசூரிய மீண்டும் நியமிக்கப்படவுள்ளதுடன், அமைச்சர் விஜித ஹேரத் வெளிவிவகார அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக 25 அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், அந்த அமைச்சுகளுக்காக 25 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்படுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி