தனுஷ் மீதான காதலை வெளிப்படையாக கூறிய நடிகை…

இரவின் நிழல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரேகா நாயர், நடிகர் தனுஷ் மீது தனக்குள்ள காதலை பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தி உள்ளார்.
சின்னத்திரை நடிகையான ரேகா நாயர், தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
ஹீரோயின் ஆக வேண்டும் என்கிற கனவோடு வந்த ரேகா நாயர், பல ஆண்டுகளாக முயற்சித்தும் அந்த ஆசை நிறைவேறாததால், சைடு ரோலில் நடித்து வந்தார்.
கடந்தாண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் திரைப்படத்தில் நடிகை ரேகா நாயர், அரை நிர்வாணமாக நடித்து அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் நடிகை ரேகா நாயர் நிர்வாணமாக நடித்ததை நடிகரும், சர்ச்சைக்குரிய சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார்.
இதனால் ரேகா நாயர் பயில்வான் ரங்கநாதனுடன் நடு ரோட்டில் வாக்குவாதம் செய்தார்.
அப்போது அவரை அடிக்க பாய்ந்த வீடியோவும் வெளியாகியுள்ளது.
இப்படி பரபரப்புக்கு பஞ்சமில்லாத நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் ரேகா நாயருக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
நடிகை ரேகா நாயர் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் மீது தனக்குள்ள காதலை வெளிப்படுத்தும் விதமாக நடிகை ரேகா நாயர் பேசியது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது தனுஷ் தான். எனக்கு மட்டும் கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தால் நிச்சயம் தனுஷை திருமணம் செய்திருப்பேன் என்றார்.
அந்த அளவுக்கு அவரை ரொம்ப பிடிக்கும். சமீபத்தில் கூட தனுஷை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடமே உங்களை ரொம்ப பிடிக்கும் என சொன்னேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.