ஆர்டிக் குளிர் – முக்கிய ஐரோப்பிய நகரங்களுக்கான விமான சேவைகள் பாதிப்பு!
பின்லாந்தின் கிட்டிலா (Kittila) விமான நிலையத்திலிருந்து அனைத்து விமானங்களும் இன்று மூன்றாவது நாளாக இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது.
லண்டன் (London), பிரிஸ்டல் (Bristol), மென்செஸ்டர் (Manchester), பாரிஸ் (Paris) மற்றும் ஆம்ஸ்டர்டாம் (Amsterdam) உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய நகரங்களுக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான ஆர்க்டிக் குளிரின் காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





