உலகம்

சொந்த மக்கள் மீதே தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள ஹமாஸ் – அமெரிக்காவின் அறிக்கையால் பரபரப்பு!

  • October 19, 2025
  • 0 Comments

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ளது. இந்நிலையில் காசாவில் (Gaza) வாழும் பாலஸ்தீன மக்கள் மீது உடனடி தாக்குதல்களை நடத்த ஹமாஸ் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று அமெரிக்கா வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாலஸ்தீனியர்களுக்கு (Palestinians) எதிரான திட்டமிடப்பட்ட தாக்குதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடுமையாக மீறும் செயல் என்றும், மத்தியஸ்த முயற்சிகள் மூலம் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

உலகம்

அமைதி ஒப்பந்தம் அமுல் – மீண்டும் காஸாவுக்குத் திரும்பும் பாலஸ்தீனர்கள்

  • October 11, 2025
  • 0 Comments

காசாவில் போர் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாலஸ்தீனர்கள் மீண்டும் அங்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். போரினால் இருப்பிடத்தை இழந்த ஆயிரக்கணக்கான மக்களே இவ்வாறு தமது சொந்த இடங்களை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தின் முதற்கட்ட உடன்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது. அது பல பாலஸ்தீனர்களுக்கு ஆறுதல் அளித்திருக்கிறது. அதே சமயம் அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சமும் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலும் ஹமாஸும் அமைதி உடன்பாட்டை எட்டியிருப்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே […]

உலகம்

இஸ்ரேலுக்கான விசா வழங்குவதை நிறுத்திய இந்தோனேசியா!

  • October 10, 2025
  • 0 Comments

இஸ்ரேலும் ஹமாஸும் போர்நிறுத்தத்தை ஒப்புக்கொண்டுள்ளன. இருப்பினும் இஸ்ரேலுக்கான விசா வழங்குவதை இந்தோனேசியா தொடர்ந்து மறுத்து வருகின்றது. இந்தோனேசியாவில் இந்த மாதம் ஜிம்னாஸ்டிக் (gymnasts) உலக  சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகிறது.  இதில் கலந்துகொள்ள இஸ்ரேலியர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலியர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக  இந்தோனேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர் இட்டா ஜூலியாட்டி தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மையை கொண்ட இந்தோனேசியா பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. பாலஸ்தீன அரசை […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

ட்ரம்பின் காசா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் – நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பு

  • October 10, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை சமாதான உடன்படிக்கைக்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சமாதான உடன்படிக்கைக்கு இணங்க வேண்டும் என ஹமாஸ் அமைப்புக்கு டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் இறுதி எச்சரிக்கையை விடுத்திருந்தார். இவ்வாறான நிலையில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் சமாதான உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளன. இணக்கப்பாட்டுக்கு அமைய எதிர்வரும் திங்கள் […]

உலகம்

காசாவுக்கு நேரில் சென்று நிலைமையைப் பார்வையிட தயாராகும் ட்ரம்ப்

  • October 9, 2025
  • 0 Comments

காசாவுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிடுவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வருகிறார். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான காசா சமாதானத்திற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் டொனால்ட் ட்ரம்ப் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். காசாவுக்கான விஜயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக சமாதான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்த நாடாக செயற்படும் எகிப்திற்கு, டொனால்ட் ட்ரம்ப் முதலில் விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, ட்ரம்ப் […]

உலகம்

கடவுளின் உதவியுடன் பணயக்கைதிகளை அழைத்து வருவோம் – இஸ்ரேல் பிரதமர் நம்பிக்கை

  • October 9, 2025
  • 0 Comments

கடவுளின் உதவியுடன் காசாவில் சிக்கியுள்ள பணய கைதிகளை அழைத்து வருவோம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பினால் பிடிக்கப்பட்ட பணய கைதிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இந்த தகவலை இஸ்ரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் சமாதான ஒப்பந்தத்தை அங்கீகரிக்க நாளை தனது அமைச்சரவையைக் கூட்டுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எட்டப்பட்ட ஒப்பந்தத்தில் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலியப் படைகளை திரும்பப் […]

உலகம்

முடிவுக்கு வரும் காசா போர்! ட்ரம்பின் திட்டத்தில் கையொப்பமிட்ட ஹமாஸ் – இஸ்ரேல்

  • October 9, 2025
  • 0 Comments

காசாவில் இரண்டு வருடங்களாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமாதான உடன்படிக்கையின் கீழ் சாத்தியமாகியுள்ளது. இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் உடன்பாட்டை எட்டியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். எகிப்தில் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் ட்ரம்பின் 20 அம்ச திட்டத்தின் ஆரம்ப கட்டங்கள் குறித்து இரு தரப்புக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டால், ஈரான், ஏமன் மற்றும் லெபனான் போன்ற நாடுகளை […]