கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய திரைப்படம்… சுந்தர் சி-யின் மாஸ்டர் ஐடியா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173 ஆவது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தனது எக்ஸ் தளத்தில் ரஜினிக்கு ஒரு கடிதத்தையும், சில புகைப்படங்களையும் நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் இந்தப் புதிய படம் வரும் 2027 ஆம் ஆண்டின் பொங்கல் அன்று வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, நடிகர்கள் கமல் மற்றும் ரஜினி இணைந்து நடிக்கப்போவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அப்படத்தை லோகேஷ் அல்லது நெல்சன் இவர்களில் யார் இயக்கப் போகின்றார்கள் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில், ரஜினியின் அடுத்தடுத்து படங்கள் பற்றிய அறிவிப்பால் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.






