இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி – அனுரவை பாராட்டிய சுமந்திரன்

ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற அனுரகுமார திஸாநாயக்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க, இன அல்லது மத பேரினவாதத்தில் தங்கியிருக்காமல் வெற்றியைப் பெற்றதற்காக சுமந்திரன், பாராட்டியதுடன் இது அவரது பிரச்சாரத்தை வேறுபடுத்திய முக்கிய காரணியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இன அல்லது மதப் பேரினவாதத்தை நாடாமல் பெற்ற அபார வெற்றிக்காக அனுர திஸாநாயக்கவுக்கு வாழ்த்துகள்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆலோசனையின் பேரில் மற்றவர்களை நிராகரித்து சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களித்த வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கும் தேர்தல் வரைபடத்தில் வித்தியாசத்தை காட்டியவர்களுக்கும் எமது நன்றிகள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 30 times, 1 visits today)