புதிய மருந்துகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை
இலங்கை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் தனது உற்பத்தித் திறனை அதிகரித்து, இந்த ஆண்டில் பாரிய இலக்குகளை அடைவதற்குத் திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு 10 புதிய மருந்து தயாரிப்புகளைச் சந்தைக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் 3,625 மில்லியன் மாத்திரைகளை உற்பத்தி செய்து சாதனை படைத்திருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை 4,000 மில்லியனாக உயர்த்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 70 வகையான மருந்துகளை உற்பத்தி செய்து வரும் இக்கூட்டுத்தாபனம், கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் 5 புதிய மருந்துகளை அறிமுகப்படுத்தியிருந்தது.
அதேவேளை, கடந்த 2025 ஆம் ஆண்டில் 27.06 பில்லியன் ரூபாயை மொத்த வருமானமாக ஈட்டியுள்ளதாக அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





