இலங்கை

இலங்கை மின்சார சபைக்கு ஏற்படவுள்ள பாரிய நெருக்கடி : மின் கட்டணங்கள் உயர வாய்ப்பு!

இலங்கை மின்சார சபைக்கு இவ்வருடம் 5000 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படும் என அதன் சிரேஷ்ட பொறியியலாளர்கள் கூறுகின்றனர்.

இரண்டு தடவைகள் மின்சாரக் கட்டணம் 75% அதிகரிக்கப்பட்ட போதிலும் நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது, ​​டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து, நாட்டின் தேவையை தொடர்ந்து பூர்த்தி செய்ய, மின்சாரம் பெறுவதால், இவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, நிலக்கரியின் விலை மற்றும் அவற்றை நாட்டிற்கு இறக்குமதி செய்யும் போது கப்பல் தாமதக் கட்டணத்தை செலுத்த வேண்டிய தேவையும் இந்த நஷ்டம் அதிகரிக்க காரணமாக உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்வதன் மூலம், சபையை திவாலாக்கி, நிறுவனங்களை விற்பனை செய்வதே சிலரது நோக்கமாக இருப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!