இலங்கை செய்தி

இஸ்ரேலுக்கான விமான பயணச்சீட்டு கட்டணம் குறைப்பு – இலங்கை வெளியிட்ட அறிவிப்பு

பணி நிமித்தம் இஸ்ரேலுக்குப் பயணிக்கும் பணியாளர்களுக்கான விமான பயணச்சீட்டு கட்டணத்தை 75 ஆயிரம் ரூபாவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் கொரிய பணிக்காக விண்ணப்பிக்கும் நபர்களுக்கான விமானப் பயணச்சீட்டு வழங்கும் முறைமை தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

விமானப் பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்ட சிலருக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே, ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானப் பயணச்சீட்டுகளை நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.

முந்தைய முறைமையில் இம்மாதம் இறுதிவரை விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால், எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் புதிய முறையினை அமல்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை