பாலஸ்தீன அரச அங்கீகாரத்திற்கு ஸ்பெயின் பிரதமர் வலியுறுத்தல்
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது பல ஐரோப்பிய ஒன்றிய சகாக்களை அடுத்த வாரத்தில் சந்தித்து பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கான ஆதரவைப் பெற முயற்சிப்பார் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டை மையமாகக் கொண்டு நோர்வே, அயர்லாந்து, போர்ச்சுகல், ஸ்லோவேனியா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளின் பிரதமர்களுடனான சந்திப்புகள் சான்செஸின் நிகழ்ச்சி நிரலில் அடங்கும் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் பிலார் அலெக்ரியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
(Visited 3 times, 1 visits today)