செய்தி

SLvsNZ – இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

எனினும், பல்வேறு சந்தர்ப்பங்களில் மழை குறுக்கிட்டதால் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 45.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்த 209 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக Mark Chapman 76 ஓட்டங்களையும் Mitchell Hay 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் மஹீஷ் தீக்‌ஷன மற்றும் ஜெப்ரி வெண்டர்சே தலா 3 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து, 210 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 46 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்த வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க 28 ஓட்டங்களையும், மஹீஸ் தீக்‌ஷன ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் Michael Bracewell 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் ஊடாக ஒருநாள் தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில், 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி