பிரான்சில் ஆசிரியையின் தலையை துண்டித்த வழக்கில் ஆறு பிரெஞ்சு இளைஞர்கள் குற்றவாளிகளாக தீர்ப்பு
2020 இல் பிரான்சின் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு அருகே வரலாற்று ஆசிரியர் ஒருவர் தலை துண்டித்துக் கொலைசெய்யப்பட்ட வழக்கில் ஆறு இளைஞர்கள் குற்றவாளிகள் என பிரெஞ்சு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது ..
நபிகள் நாயகம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியதால்
ஆத்திரமடைந்த சந்தேக நபர்கள் ஆசிரியரைக் கொன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
அவரை கொலை செய்த 18 வயது நபர் ரஷ்யாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் செசென்யா பகுதியைச் சேர்ந்தவர் என்று பிரான்ஸ் நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
வடக்கு பிரான்சில் ஒரு இளைஞன் ஒரு பள்ளித் தாக்குதலில் ஒரு ஆசிரியர் படுகாயமடைந்து பல வாரங்களுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 5 times, 1 visits today)