இஸ்தான்புல்லில் நீதிமன்றத்திற்கு வெளியே துப்பாக்கிச்சூடு : இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
இஸ்தான்புல்லின் பிரதான நீதிமன்றத்திற்கு வெளியே உள்ள பாதுகாப்புச் சோதனைச் சாவடியைத் தாக்கிய பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இருவரை துருக்கிய பொலிஸார் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இன்று (06.02) இடம்பெற்றுள்ளது. இதில் ஆறுபேர் காயமடைந்தாகவும், ஒரு ஆண் மற்றும் பெண்ணொருவர் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தாக்குதல்களை நடத்தியவர்கள் 1980 களில் இருந்து துருக்கியில் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திய இடதுசாரிக் குழுவின் உறுப்பினர்கள் என்று உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா கூறினார்.
இது தொடர்பில் வழக்குறைஞர்கள் பல்முனை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 4 times, 1 visits today)