வாழ்க்கையில் மறக்கவே முடியாத பரிசை பெற்றார் சரிகமப பவித்ரா? அடுத்தது யார்?

ஜீ தமிழ் ‘சரிகமப சீசன் 5’ நிகழ்ச்சி இறுதிச் சுற்றை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அடுத்த இறுதி போட்டியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த வாரம் பழைய பாடல்களின் சுற்றில், ரசிகர்களுக்கு மட்டுமல்ல போட்டியாளர்களுக்கும் மறக்க முடியாத உணர்வுபூர்வமான தருணங்களைக் கொடுத்திருக்கிறது.
அனைத்து போட்டியாளர்களுக்கும் அந்த மேடையில் ஒரு சப்ரைஸ் நடந்தது. அதிலும் போட்டியாளர் பவித்ராவுக்கு வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நிகழ்வு அந்த மேடையில் நடந்தது.
பவித்ரா பாடுவதைக் கேட்டு, அவரை ஒரு பெரிய பாடகி ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்த பவித்ராவின் கணவர், எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் காலமாகிவிட்டார்.
தன் குழந்தையுடன் தனியாக வசித்து வரும் பவித்ரா, கணவரின் அந்தக் கனவை நிறைவேற்றுவதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.
பழைய பாடல்கள் சுற்றில், ‘உன்னை காணாத கண்கள் கண்ணில்லை’ என்ற பாடலை மிகவும் அழகாகப் பாடினார்.
இதன்போது அவரைப் பாராட்டிப் பேசிய பின்னணிப் பாடகர் மகாராஜன், பவித்ராவுக்கு உடனடியாக ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸை கொடுத்தார்.
தன்னுடைய அடுத்த படத்தில் பாடுவதற்குப் பவித்ராவுக்கு வாய்ப்பு வழங்குவதாக மேடையிலேயே அறிவித்தார்.
அதேபோல் பல கனவுகளுடன் எதிர்பார்ப்புகளுடன் அந்த மேடையில் இன்னும் சில போட்டியாளர்கள் இருக்கின்றார்கள். இவர்களில் அடுத்த இறுதி போட்டியாளர் யார் என்பதை அறிய நாம் இன்று ஒரு நாள் காத்திருக்கத்தான் வேண்டும்.