“ஜீ தமிழ் சரிகமப” நடுவரை எழுந்து ஓட விட்ட சபேசன்… அட்டகாசமான புரோமோ…
 
																																		ஜீ தமிழ் சரிகமப வில் இன்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த சபேசனின் புரோமே வெளியாகி சக்கை போடு போடுகின்றது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரவிருக்கும் எபிசோட்களில் மூன்றாவது பைனலிஸ்ட் தெரிவு செய்யப்பட உள்ளார்.
அதற்காக சபேசன் உள்ளிட்ட ஐவருக்கு இடையில் போட்டிகள் மும்முரமாக உள்ளன.
இதையடுத்து நேற்று மற்றும் இன்று ஒவ்வொருவரின் புரோமோக்கள் வெளிவந்த நிலையில், சபேசனின் புரோமோக்காக இலங்கையர்கள் உட்பட அனைவரும் காத்திருந்தனர்.
அந்த வகையில் சபேசன் இராவணன் படத்திலிருந்து கார்த்திக் பாடிய உசுரே போகுதே.. உசுரே போகுதே.. என்ற பாடலை பாடினார்.
ஒரிஜினல் பாடகருக்கு முன்பே சற்றும் பயமில்லாமல் சபேசன் பாடிய பாடலைக்கேட்டு அரங்கமே எழுந்து நின்றது.
பாடகர் கார்த்திக் அவரது கதிரையில் இருந்து இறங்கிஓடி வந்து சபேசனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்ததுடன், அவருக்கு இன்னொரு ஸ்டார் கொடுத்தார்.
அடுத்ததாக இருவரும் சேர்ந்து உசுரே போகுது பாடலை அட்டகாசமாக பாடியுள்ளனர்.
இதோ இந்த புரோமோ…
 
        



 
                         
                            
