பிரித்தானியாவில் சாரா கொலை வழக்கு: பொலிஸார் தேடலில் சிக்கிய சகோதரர்கள்
பிரித்தானியாவில் பாகிஸ்தான் வம்சாவளியினரான சிறுமி ஒருத்தி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், பொலிஸார் தொடர்ந்து அவளது தந்தை, சித்தி மற்றும் தந்தையின் தம்பி ஆகியோரை வலை வீசித் தேடிவருகின்றனர்.
ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள Woking என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாள் சாரா (10), என்னும் சிறுமி.சாராவின் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு முந்தைய தினம், சாராவின் தந்தையான ஷெரீஃப் (41) அவரது இரண்டாவது மனைவியான பட்டூல் (29) மற்றும் ஷெரீஃபின் சகோதரரான மாலிக் (28) ஆகியோர், ஷெரீஃபின் ஐந்து பிள்ளைகளுடன் பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்கள். அவர்களை பிரித்தானியா மற்றும் பாகிஸ்தான் பொலிஸார் தேடி வருகிறார்கள்.
பொலிஸார், ஷெரீஃப், பட்டூல் மற்றும் ஷெரீஃபின் சகோதரரான மாலிக் ஆகியோரை வலை வீசித் தேடிவரும் நிலையில், அவர்கள் ஷெரீஃபின் ஐந்து பிள்ளைகளைக் கண்டுபிடித்துள்ளார்கள். அந்தப் பிள்ளைகள் ஒன்று முதல் 13 வயது வரையுள்ள பிள்ளைகள் ஆவார்கள்.
பொலிஸார் தம்பதியரைத் தேடும்போது, பிள்ளைகள் வீட்டிலிருந்த ஒரு அறையில் இருந்ததைக் கண்டு அவர்களை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளார்கள்.பின்னர் அவர்கள் அவர்களுடைய தாத்தாவாகிய முகம்மதுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை அவர்கள் தங்கள் தாத்தாவுடன் இருந்துவரும் நிலையில், இன்று, அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளார்கள்.இதற்கிடையில், ஷெரீஃப், பட்டூல் மற்றும் மாலிக் ஆகியோரை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம் என பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.