ரஷ்ய அச்சுறுத்தல் – நீருக்கடியில் பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சியில் பிரித்தானியா!
ரஷ்யாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நீருக்கடியில் பாதுகாப்பை பலப்படுத்த பல மில்லியன் பவுண்டுகள் செலவில் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கவுள்ளதாக ரோயல் கடற்படை அறிவித்துள்ளது.
அட்லாண்டிக் பாஸ்டன் (Atlantic Bastion) என்று அழைக்கப்படும் இந்த திட்டம் கடலுக்கடியில் கேபிள்கள் மற்றும் குழாய்களைப் பாதுகாத்தல், செயற்கை நுண்ணறிவு மற்றும் பாரம்பரிய போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை பாதுகாக்க உறுதுணையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ரஷ்ய உளவு கப்பல் நடவடிக்கைகளால் பால்டிக் கடல் கேபிள்கள் சேதமடைந்ததை தொடர்ந்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அச்சுறுத்தல்களைக் கண்டறிதல், தடுப்பது மற்றும் தோற்கடிப்பதில் இந்தப் படை ‘மிகவும் முன்னேறியதாக இருக்கும் என பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி (John Healey ) தெரிவித்துள்ளார்.





