நார்வேயில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ரஷ்ய உளவாளியான பெலுகா திமிங்கலம்!
ரஷ்யாவின் உளவாளி என்று அழைக்கப்படும் ஹவால்டிமிர் வெள்ளை இன திமிங்கிலம் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது எப்படி உயிரிழந்தது என்பது குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. மீனவர்களுடன் மிகவும் நட்பாகப் பழகும் இந்த திமிங்கலம் திடீரென உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நார்வே அருகே ரஷ்யா உளவு பார்க்க அனுப்பிய திமிங்கலம் ஒன்று சிக்கியது. அதாவது, கடந்த 2019ம் ஆண்டு உலகெங்கும் பேசுபொருளான பெலுகா வகை திமிங்கலம் தான் ஹவால்டிமிர்.. 14-அடி நீளமும் 1224 கிலோ எடையும் கொண்ட இந்த திமிங்கலத்தை பலரும் ரஷ்யாவின் உளவாளி என்றே அழைக்கிறார்கள்.
மீனவர்களுடன் எப்போதும் நட்பாகப் பழகும் இந்த திமிங்கலம் திடீரென இப்போது உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த திமிங்கலம் எப்படி உயிரிழந்தது. அதற்கு என்ன ஆனது என்பது குறித்த தகவல்கள் இப்போது வரை தெளிவாக இல்லை. இது தொடர்பாக விசாரணை என்றும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 2019ல் இந்த திமிங்கிலம் கடலில் மீனவர்கள் அதிகம் இருக்கும் இடத்திற்குச் சென்றுள்ளது. கடலில் திமிங்கலத்தை பார்த்தால் அது உளவாளியா என நீங்கள் கேட்கலாம். ஆனால், விஷயம் என்னவென்றால் அந்த திமிங்கலத்தில் கேமரா உடன் கூடிய சில கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த கருவிகளில் ரஷ்யாவில் உள்ள St செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சிட்டி என்ற பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாகவே அந்த திமங்கிலம் ரஷ்ய உளவாளியாக இருக்கலாம் என்று பலரும் பேச தொடங்கினர்.
அதேநேரம் அந்த திமிங்கலம் உளாவாளியா என்பது யாருக்கும் தெரியாது. எதிர்பாராத விதமாக அந்த திமிங்கலத்தின் உடலில் இந்த கருவிகள் சிக்கி இருக்கலாம் என்றும் சிலர் கூறினர். ஆனால், எதிர்பாராத விதமாக இதுபோல வேறு நாடுகளுக்குக் கருவிகள் சென்றால் அது குறித்துச் சம்மந்தப்பட்ட நாடு விளக்கமளிக்கும் அல்லது உரிமை கோரும். ஆனால், ரஷ்ய சிட்டி பொறிக்கப்பட்டு இருந்தாலும் ரஷ்யா ராணுவம் அதை உரிமை கோரவே இல்லை.
இதுவே சந்தேகத்தை அதிகரித்தது. மேலும்,பொதுவாக இந்த பெலுகா வகை திமிங்கலங்கள் மக்கள் நடமாட்டமே இல்லாத கடற்கரைகளில் உள்ள குளிர்ச்சியான ஆர்க்டிக் நீரில் வசிக்கும். இவை மனிதர்களே கண்டாலே தெரித்து ஓடும். ஆனால், இந்த பெலுகா திமிங்கலம் மனிதர்களுடன் மிகச் சகஜமாகவே இருந்தது. ஏதோ சிறு வயதில் இருந்தே மனிதர்கள் கூட இருந்தது பேலவே மீனவர்களுடன் நெக்காமாக இந்தது. ரஷ்ய உளவாளி என சொல்ல இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
உலகெங்கும் இந்த பேச்சை அதிகரித்த நிலையில், நார்வே அரசு இது குறித்த எச்சரிக்கையைக் கூட வெளியிட்டது. அதாவது ஒஸ்லோவிற்கு அருகில் உள்ள ஃப்ஜோர்டில் காணப்படும் இந்த பெலுகா திமிங்களத்துடன் எந்தவொரு தொடர்பையும் வைத்திருக்கக்கூடாது என்று அந்நாட்டு அரசு கேட்டுக் கண்டது