ஐரோப்பா

நேட்டோ எல்லைக்கருகில் ரஷ்ய விமானப்படை விமானங்கள்; இடைமறித்த பிரித்தானியா

நேற்று சர்வதேச விதிகளை மீறி நேட்டோ எல்லைக்கருகே வந்த ரஷ்ய விமானப்படை விமானங்கள் மூன்றை, பிரித்தானிய விமானப்படை விமானங்கள் இடைமறித்துள்ளன.

நேட்டோ அமைப்பு, தன்னுடைய பலத்தை ரஷ்யா முதலான நாடுகளுக்குக் காட்டும் வகையில், ஜேர்மனி தலைமையில் பிரம்மாண்ட போர்ப்பயிற்சி ஒன்றை மேற்கொள்ள உள்ளது.

நேட்டோவின் 25 உறுப்பு நாடுகளிலிருந்து 10,000 உறுப்பினர்களும், 250 விமானங்களும் இந்த போர்ப்பயிற்சியில் கலந்துகொள்கிறார்கள்.அதற்காக, பிரித்தானிய விமானப்படை விமானங்கள், எஸ்தோனியா மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

அந்த விமானங்கள்தான், சர்வதேச விதிகளை மீறி நேட்டோ எல்லைக்கருகே வந்த ரஷ்ய விமானப்படை விமானங்களை இடைமறித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!