இரவு முழுவதும் 147 ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய ரஷ்யா : மூவர் பலி!

உக்ரைனின் கீவை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் பெண் உள்பட மூன்றுபேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் 11 மாத குழந்தை, ஒரு தந்தை மற்றும் அவரது ஐந்து வயது மகள் ஆகியோர் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட ட்ரோன் தாக்குதல் அடுக்குமாடி குடியிருப்பை குறிவைத்ததாக கூறப்படுகிறது.
உக்ரைனை குறிவைத்து பறந்த 147 ட்ரோன்களில் 97 ட்ரோன்களை வான் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாக மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)